மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்!

கடைக்குச் சென்ற மாலதி 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கிக்கொண்டு கடைக்காரரிடம் 2,000 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுக்கிறார்.

அதைக் கவனிக்காத கடைக்காரர் 2,000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்துக்குக் கடைக்குச் சென்று 2,000 ரூபாய்க்குச் சில்லறை வாங்கி வருகிறார்.

பொருளின் விலையான 200 ரூபாயை எடுத்துக்கொண்டு, மீதி 1,800 ரூபாயை அப்பெண்ணிடம் கொடுத்துவிடுகிறார்.

சிறிது நேரத்தில் பக்கத்துக் கடைக்காரர் வந்து இது கள்ள நோட்டு என்று சொல்லி புதிய 2,000 ரூபாய் நோட்டை வாங்கிச் சென்றுவிடுகிறார்.

தற்போது, கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டமாகியுள்ளது?

யோசியுங்கள். இன்று மதியம் விடையுடன் சந்திக்கிறோம்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon