மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

நாளை விண்ணில் பாயும் ஜிசாட்-31

நாளை விண்ணில் பாயும் ஜிசாட்-31

விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்போன் சேவைகளுக்காக ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது.

தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சார்பில் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ. புவிவட்டப் பாதையில் கேயு வரிசை டிரான்ஸ்பான்டர் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 6) பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இது குறித்து, நேற்று இஸ்ரோ செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டது. 15 ஆண்டுக் கால சேவையை முன்னிறுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் / ஜிசாட் ரக செயற்கைக்கோள் வரிசையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜிசாட்-31 செயற்கைக்கோள் 2,535 கிலோகிராம் எடை கொண்டது. இது இந்தியாவின் உள்நாட்டு மற்றும் எல்லைப்புறங்களை கவரேஜ் செய்யும். நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்திகளை ஒன்றிணைத்தல், செல்போன் சேவையை இலகுவாக்குதல் உட்பட பல்வேறு பணிகள் ஜிசாட்-31 மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon