மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

லஞ்சப் புகார்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

லஞ்சப் புகார்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போக்குவரத்து ஆய்வாளர், பேருந்து நடத்துநர்கள் பயன்படுத்தும் பை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, அந்த வீடியோவில் இடம்பெற்ற ஆய்வாளர் ரவிச்சந்திரனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் காவல் ஆணையர் விஸ்வநாதன். அது மட்டுமல்லாமல், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை தேனாம்பேட்டையில் காவலர் ஒருவருக்கு விடுமுறை தர மறுத்ததோடு, அவரை துரத்திச் சென்று விபத்தில் சிக்கவைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் தொடர்புடையவர் ஆய்வாளர் ரவிச்சந்திரன்.

இது போன்று, மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய துணை ஆய்வாளர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் மதுரை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon