மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

விஜய் மல்லையா: இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி!

விஜய் மல்லையா: இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி!

வங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் 14க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியன பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

லண்டனிலிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக, அங்குள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்தியாவிலும் அவர் மீது பல்வேறு புகார்களின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விஜய் மல்லையா ஒரு பொருளாதாரக் குற்றவாளி என்று மும்பை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தடையில்லை என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மல்லையாவை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு உள் துறைச் செயலர் சஜித் ஜாவித் நேற்று (பிப்ரவரி 4) அனுமதியளித்தார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தான் மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon