மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

உங்க சர்டிபிகேட் தேவையில்லை: ராகுலுக்கு கட்கரி பதில்!

உங்க சர்டிபிகேட் தேவையில்லை: ராகுலுக்கு கட்கரி பதில்!

பாஜகவில் தைரியம் கொண்டவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிதான் என்று ராகுல் காந்தி பாரட்டிய நிலையில், இதற்கு கட்கரி பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரியின் சமீபத்திய கருத்துக்கள் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருந்துவருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த பாஜக மாணவர் அமைப்பின் கூட்டத்தில் பேசிய கட்கரி, “பாஜகவினர் தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதன் பின்பு தான் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் பாடுபட வேண்டும். குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை கவனிக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

கட்கரியின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கட்கரி அவர்களே, பாஜகவில் சிறிதளவு தைரியம் கொண்டவர் நீங்கள் மட்டும்தான். எனவே ரஃபேல் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசுங்கள்” என்று தெரிவித்திருந்தார். ஜனவரி 26ஆம் தேதி நடந்த குடியரசு தின அணிவகுப்பின்போது கட்கரியும், ராகுலும் அருகருகே அமர்ந்திருந்த நிலையில், ராகுலின் இந்த ட்விட் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நிதின் கட்கரி நேற்று (ஜனவரி 4) தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் அவர்களே தைரியம் குறித்து உங்களது சான்றிதழ் எனக்கு தேவை இல்லை. ஊடகங்களில் தவறாக வெளியான ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசியக் கட்சியின் தலைவரான நீங்கள் மத்திய அரசை விமர்சித்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். நல்ல புரியும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லை” என்று விமர்சித்துள்ளார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon