மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

காதலர் தினத்துக்கு ‘வர்மா’ இல்லை!

காதலர் தினத்துக்கு  ‘வர்மா’ இல்லை!

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வர்மா படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் பறவைகள், விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என விலங்குகள் நல வாரியத்தில் சான்றிதழ் பெறவேண்டும். விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னை, திருவான்மியூரின் மூன்றாவது கடற்கரைச் சாலையில் அமைந்திருந்தது. அந்த அலுவலகம் கடந்த ஆண்டு ஹரியானாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஆகிவருகிறது.

வர்மா படக்குழு விலங்குகள் நல வாரியத்தில் இருந்து இன்னும் சான்றிதழ் பெறாததால் திட்டமிட்டபடி படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மார்ச் மாத இறுதிக்குப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி படக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளது.

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பெங்கால் நடிகை மேகா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஈ4 எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்துடன் இணைந்து சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழகத்தில் படத்தை விநியோகம் செய்கிறது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon