மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

சாக்கடையில் பட்டாசு: வெடி விபத்து!

சாக்கடையில் பட்டாசு: வெடி விபத்து!

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு சிறுவன் பாதாளச் சாக்கடையில் பட்டாசு வைத்ததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தீய சக்திகளை விரட்டுவதற்காக, சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இதனைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதை, சமீபத்தில் சீன இணையதளங்களில் வைரலான வீடியோ ஒன்று விளக்கியுள்ளது.

சீனாவின் மங்கோலிய மண்டலத்தில் உள்ள சீபெங் எனும் நகரத்தில், கடந்த புதன்கிழமையன்று (ஜனவரி 30) இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவுப் பொழுதில் சாலையிலுள்ள கடைகள் திறந்திருக்க, மக்கள் போக்குவரத்து சிறிய அளவில் இருக்க, திடீரென்று பாதாளச் சாக்கடை மூடியின் அருகே பட்டாசு பற்ற வைக்கிறார் ஒரு சிறுவன். சில நொடிகளில் மூடி மேல் நோக்கிப் பிய்த்துக்கொண்டு செல்ல, தரையில் பதிக்கப்பட்ட செங்கல்கள் நொறுங்கி அங்கிருந்த வாகனங்களின் மீது விழுந்தது. ஆனால் அந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் சமீபத்தில் சீனாவிலுள்ள இணையதளங்களில் வெளியானது. வெய்போ போன்ற சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ பற்றி, ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் குவிந்தன. எல்லா வாயுக்களும் பாதாளச்சாக்கடையில் தான் உற்பத்தியாகின்றன என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon