மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

சுந்தர் பிச்சை: நம்பிக்கையிழக்கும் கூகுள் ஊழியர்கள்!

சுந்தர் பிச்சை: நம்பிக்கையிழக்கும் கூகுள் ஊழியர்கள்!

கூகுளின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை மீது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நம்பிக்கையிழப்பதாக கூகுள் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சர்வே ஒன்று கூறுகிறது.

திறன் வாய்ந்த, சிறந்த ஊழியர்களைப் பணியமர்த்துவதன் விளைவாக உச்சபட்ச லாபத்தை ஈட்டிய இணைய நிறுவனமாக கூகுள் உள்ளது. அண்மையில் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வேயில், சுந்தர் பிச்சையின் தலைமை குறித்தும், எதிர்காலப் பார்வை குறித்தும் ஊழியர்கள் நம்பிக்கையிழப்பதாக தெரிகிறது. கூகுள்ஜிஸ்ட் என்று ஒவ்வொரு ஆண்டும் இந்த சர்வே நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில், சுந்தர் பிச்சையின் தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வை குறித்து ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 78 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் 88 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்திருந்தனர்.

கூகுள் நிறுவனத்துக்கு சுந்தர் பிச்சை திறம்பட தலைமை தாங்குவார் என ஊழியர்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்று மற்றொரு கேள்வியும் சர்வேயில் கேட்கப்பட்டது. அதற்கு 74 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் 92 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்திருந்தனர். சுந்தர் பிச்சையின் தீர்மானங்கள் மற்றும் யுக்திகள் பற்றிய இதர கேள்விகளுக்கும் நேர்மறையான பதில்களின் விகிதம் சரிந்துள்ளது. இந்த சர்வேயில் கூகுளின் 89 விழுக்காடு ஊழியர்கள் பங்கேற்றனர். சுந்தர் பிச்சையின் முடிவுகளும் யுக்திகளும் கூகுளுக்கு உதவுமா என்ற கேள்விக்கு 75 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் 88 விழுக்காட்டினர் நேர்மறையாக பதிலளித்தனர். கூகுளை விட்டு வெளியேற விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று இந்த ஆண்டில் 74 விழுக்காட்டினரும், கடந்த ஆண்டில் 76 விழுக்காட்டினரும் பதிலளித்துள்ளனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon