மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

6,000 மின்சார பேருந்துகள் வாங்கும் தமிழக அரசு!

6,000 மின்சார பேருந்துகள் வாங்கும் தமிழக அரசு!

புதிதாக 6,000 மின்சார பேருந்துகள் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தமிழக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் கன்சல்டண்ட் அசோசியேசன் சார்பில் சென்னையில் பிப்ரவரி 4ஆம் தேதி நடந்த வருடாந்திர மாநாட்டில் எஸ்.கிருஷ்ணன் கலந்துகொண்டார். அங்கு பேசிய அவர், “தமிழ்நாடு அரசு புதிதாக 6,000 மின்சார பேருந்துகளை (பேட்டரி பஸ்) வாங்க முடிவு செய்துள்ளது. பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜெர்மனைச் சேர்ந்த கே.எஃப்.டபள்யூ. நிறுவனத்திடமிருந்து 6,000 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்கான தேவை இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டட விதிகள்-2019 நேற்று வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் காணப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகளின் அடிப்படையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கிடையில் இந்நிகழ்ச்சியில் சென்னை ரியல் எஸ்டேட் சார்ந்த அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சென்னையின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளில் ஐ.டி. துறைகள் வேகமாக வளர்ந்து வருவதால் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon