மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

அரசியல் பக்கம் நகர்ந்த விஜய் சேதுபதி

அரசியல் பக்கம் நகர்ந்த விஜய் சேதுபதி

அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களுக்காக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், புதுமுக இயக்குநரான டெல்லிபிரசாத் தீனதயாளுடன் அரசியல் படம் ஒன்றிற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து டெல்லிபிரசாத் பேசுகையில், “திரைக்கதையுடன் அண்மையில் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைக்கதையை விவரித்தபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். ஃபேண்டசி அம்சங்களுடன் முழு அரசியல் படமாக இது இருக்கும். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும். விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்துக்கு சில ஃபேண்டசி அம்சங்கள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.96 படத்திற்கு விநியோகஸ்தராக இருந்த லலித் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

“மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜூன் மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்று டெல்லிபிரசாத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சில இயக்குநர்களுடன் இணை இயக்குநராக டெல்லிபிரசாத் பணிபுரிந்துள்ளார்.

“ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நான் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். படிப்பிற்கு பின்னர் ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா, பாலாஜி தரணிதரன் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளேன். 96 படத்தில் இயக்குநர் பிரேம் குமாருக்கு இணை இயக்குநராகவும் பணிபுரிந்தேன். தற்போது எனது முதல் படத்தை இயக்கப்போகிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon