மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

சென்னை மாநகர காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்து, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை என்டிஎல் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ராஜேஷ், கடந்த 25ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு போலீசார்தான் காரணம் என்று அவர் தனது செல்போன் வீடியோவில் பேசியிருந்தது சமீபத்தில் தெரிய வந்தது.

இதைக் கண்டித்தும், இறந்த ஓட்டுநருக்கு நீதி வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழகத்திலுள்ள கால் டாக்ஸி ஓட்டுநர்கள். அவரின் சாவுக்குக் காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். கால் டாக்சி ஓட்டுநர்கள், சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள், ஐடி நிறுவனங்களில் இயங்கக்கூடிய வாகனங்களின் ஓட்டுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 5) காலை 6 மணி முதல் மாலை 6 மணி முதல் இப்போராட்டம் நடைபெறும். வேலைநிறுத்தம் காரணமாக கால் டாக்ஸிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலும், கோவையிலும் தலா 5,000 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon