மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

துப்புரவுப் பணிக்கு முதுநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பம்!

துப்புரவுப் பணிக்கு முதுநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பம்!

தமிழக சட்டமன்றச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளர் காலியிடங்களுக்கு முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றச் செயலகத்தில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. “குறைந்தபட்ச எழுத்தறிவு இருந்தால் போதும்; மாதம் 17,000 ரூபாய் ஊதியம்; அரசுப் பணியாளர்களுக்கான பிற சலுகைகளும் கிடைக்கும்” என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, 14 துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனார் பிஇ, எம்பிஏ, எம்டெக் மற்றும் பிற கலை அறிவியல் பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். இது குறித்த தகவல்கள் சட்டமன்றச் செயலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய சட்டமன்றச் செயலக அதிகாரி ஒருவர், “சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர்தான் ஆட்களை நியமிக்க முடிவு செய்திருந்தோம். தற்போது, தேர்தல் முடிந்த பின்னரே ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon