மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

யாருலாம் 90’s கிட்ஸ் கை தூக்குங்க: அப்டேட் குமாரு

யாருலாம் 90’s கிட்ஸ் கை தூக்குங்க: அப்டேட் குமாரு

உண்மையிலேயே இந்த 90’s கிட்ஸ் யாருக்கும் கல்யாணமே ஆகலையா.. பேஸ்புக், ட்விட்டர் பக்கம் போனா ஃபுல்லா ‘நமக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டிக்குது’ன்னு அழுது புலம்புறாங்க. அப்ப ஊருக்குள்ள நடக்குற கல்யாணம் எல்லாம் யாருக்கு தான்ப்பா நடக்குது.. அந்த மாதிரி ஸ்டேட்டஸ், மீம்ஸ் போட்டா தான் லைக் போடுறாங்கன்னு கல்யாணம் ஆகி மூனாவது குழந்தைக்கு மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பியிருக்குற அங்கிள் கூட இப்ப அந்த வேலையில இறங்கியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் இந்த பட்டிமன்ற காலத்துல இருந்து வீட்டுல மனைவிட்ட அடி வாங்கி வாங்கியே உயிர் வாழ்ற மாதிரியே சில கணவர்கள் இங்க வந்தும் சீன் போட்டுகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க.. யாருலாம் அப்படி போட்ருக்காங்கன்னு கணக்கு எடுத்துட்டு வாரேன்.

@Kozhiyaar

நீங்கள் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்ள, அவரின் எண்ணிற்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்து பாருங்கள்!!!

@Thaadikkaran

தன்னோட மகன் குழந்தை அவனுக்கு ஒன்னும் தெரியாதுன்னு மாமியார் சொல்லும் போது, கட்டுன பொண்டாட்டி கணவனை பார்க்குற பார்வை இருக்கே...!!!

@mohanramko

வாயும் வயிறுமாய் இருப்பதை பார்த்தும், இரக்கமில்லாமல் 'தொப்பை' என்று கிண்டல் செய்கிறார்கள் ஆண்களை...

@ajmalnks

நிகழ்கால அரசியலைப் பற்றிய மக்களின் எண்ணத்தை அறிய நகரப்பேருந்துகளில் சென்று வந்தாலே போதும்.

@mufthimohamed1

பழம் சாப்பிடும்போது விதைய முழுங்கிட்டா வயித்துல செடி வளரும்..

90sKidsRumors

@mohanramko

படுத்ததும் தூக்கம் வரணும்னா, நைட் ஷிப்ட் பார்த்தால் மட்டுமே சாத்தியம்...

@parveenyunus

ஒன் ப்ளஸ் ஒண்ணு டூன்னு சொல்லி கொடுக்கறதுக்கும் ஒரு சாய்பல்லவி தேவைபடுது நமக்கு.

@Suyanalavaathi

இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பது பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் தான்!!! - போர்ப்ஸ் பத்திரிகை

தமிழிசை : ஊழலாக இருந்தால் என்ன.. மோடி ஆட்சியில் வளர்ந்திருக்கிறது அல்லவா..

தாமரை மலர்ந்தே தீரும் !!

@shivaas_twitz

நம்ம பள்ளிக் கால நண்பர்கள் சேர்ந்து ஒரு வாட்சப் குரூப் தொடங்கினாங்க...

முதல் 4 நாள், ஆர்வத்துடன் நலம் விசாரித்து பயங்கர பரபரப்பா இருந்துச்சு குரூப்...

திடீர்னு ஒருத்தன், நான் எழுதிய கவிதைகள்னு போட ஆரம்பிச்சான்...

அத்தோட குரூப், அமாவாசை கறிக்கடை மாதிரி வெறிச்சோடி போச்சு...

@CreativeTwitz

இன்னும் ஐந்தாண்டுகளில் நாட்டை மீட்டு விடுவோம் - பிரதமர்

ஆமா அடகு வெக்க அஞ்சு வருசமாச்சில்ல. மீட்கவும் அஞ்சு வருசமாவது ஆவுமே.

@Annaiinpillai

எங்க வீட்டுகாரர்லாம் அப்படி இல்லைனு தோழியிடம் பேசிய உரையாடலை கேட்ட கணவருக்கு மனதில் இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புதுனு சிரிச்சிக்கிட்டே வெளியே கிளம்புவது டிசைன்!

@its_mathavan

தமிழக அரசியலில் மோடியின் வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் ----டாக்டர் தமிழிசை

ஏன் ....? எட்டு வழிச்சாலை

வளைஞ்சு வளைஞ்சு போடப்போறீங்களா...

@RahimGazzali

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்!- அன்புமணி

திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லைன்னு சொன்னாங்களே?..

ஒருவேளை அதிமுகவை திராவிட கட்சியா நினைக்கல போல...

@Annaiinpillai

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - நடிகர் விஷால் # போராடுறதுல அன்னா ஹாசரேக்கே டப்பு கொடுப்பாரு போல மனுஷன்?!

Nivedita Louis

வாழ இடம் தேடி அலையும் சின்னத் தம்பியைப் பார்த்து "ஐயோ பாவம்" சொல்லும் நாம் தான், கட்டுமானப் பணிக்கு வந்து 300 ரூபாய் கூலிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் வடக்கத்தியனைப் பார்த்து, "இப்பலாம் எங்க பார்த்தாலும் இவனுங்க தான் சார்...எப்டியோ நம்ம ஆளுங்க வேலையை எல்லாம் இவனுங்க வந்து காலி பண்ணிப்புடுறாய்ங்க" என்றபடி நகர்கிறோம்!

-லாக் ஆஃப்

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon