மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

எல்பிஜி நுகர்வு: 2ஆவது இடத்தில் இந்தியா!

எல்பிஜி நுகர்வு: 2ஆவது இடத்தில் இந்தியா!

திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி) நுகர்வில் இந்தியா சர்வதேச அளவில் 2ஆவது இடத்தில் உள்ளதாக எண்ணெய் துறை செயலாளர் எம்.எம்.குட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிய எல்பிஜி மாநாட்டில் கலந்துகொண்டு எம்.எம்.குட்டி பேசுகையில், ”சுத்தமான சமையல் எரிவாயு இணைப்பை எல்லா வீடுகளுக்கும் கொண்டு செல்லும் விதமாக உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் காரணமாக உலக அளவில் எல்பிஜி நுகர்வில் இந்தியா 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவை 2025ஆம் ஆண்டுக்குள் இன்னும் 34 விழுக்காடு அதிகரிக்கும்” என்றார்.

2017-18ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் எல்பிஜி இணைப்பு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 22.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2014-15ஆம் ஆண்டில் 14.8 கோடியாக மட்டுமே இருந்தது. எல்பிஜி பயனாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “கிராமப்புறங்களில் எல்பிஜி இணைப்பு பெறுவோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எண்ணெய் நுகர்வு 2025ஆம் ஆண்டில் 30.3 மில்லியன் டன்னாகவும், 2040ஆம் ஆண்டில் 40.6 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என்று எண்ணெய் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது” என்றார்.

மேலும், “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரையில் ஏழை மக்களுக்கு 6.31 இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் 8 கோடி வீடுகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon