மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஸ்டெர்லைட்: தீர்ப்பாயத்துக்கு அதிகாரமுள்ளதாக வாதம்!

ஸ்டெர்லைட்: தீர்ப்பாயத்துக்கு அதிகாரமுள்ளதாக வாதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு முறை ஆலையைத் திறக்க அனுமதி வழங்குமாறு தங்கள் நிறுவனம் சார்பில் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தது வேதாந்தா நிறுவனம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும் ஆலையைத் திறக்கத் தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கிறது என்றும், உடனடியாக ஆலையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 5ஆம் தேதியன்று அனைத்து வாதங்களும் முடிக்கப்பட வேண்டுமென்று உத்தரவிட்டது.

இன்று (பிப்ரவரி 5) இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாகத் தமிழக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரணை செய்யும் அதிகாரமுள்ளது என்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon