மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

ஃபேஸ்புக்கில் அதிகரிக்கும் தவறான கணக்குகள்!

ஃபேஸ்புக்கில் அதிகரிக்கும் தவறான கணக்குகள்!

ஃபேஸ்புக்கில் கடந்த மூன்றாண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் அதிக பயனாளிகளைக் கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் உள்ளது. ஃபேஸ்புக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தனது ஆண்டறிக்கையில், ‘2018ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டின்படி, மாதாந்திர செயலில் உள்ள பயனர்களில் 11 விழுக்காட்டினர் 2ஆவது கணக்கு வைத்துள்ளனர். இது 2015ஆம் ஆண்டில் 5 விழுக்காடாக மட்டுமே இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 2ஆவது கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து 250 மில்லியனாக உயர்ந்துள்ளது.

2018 டிசம்பர் 31 வரையிலான கணக்குப்படி, மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 2.32 பில்லியனாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 1.59 பில்லியனாக மட்டுமேயிருந்தது. பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற வளர்ந்துவரும் நாடுகளில்தான் 2018ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களில் கூடுதல் கணக்கும் வைத்துள்ளார்கள். போலியான கணக்கும் வைத்துள்ளார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதக் கணக்குப்படி ஃபேஸ்புக்கை தினசரி 1.52 பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஒன்பது மடங்கு உயர்வாகும். 2017ஆம் ஆண்டில் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.40 பில்லியனாக மட்டுமே இருந்தது.

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon