மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

தனிமையில் இனிமை இல்லையா?

 தனிமையில் இனிமை இல்லையா?

விளம்பரம்

தனிமையில் இனிமை காண முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சுலபம். ஆனால், சம்பந்தப்பட்டவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே, இந்தப் பதிலானது அமையும். தனிமையை விரும்பும் குணம், நம்மில் பலருக்குக் கிடையாது. இதற்கான பதில் ரொம்பவே சுலபமானது. பிறந்ததில் இருந்தே பலரது குரல்களைக் கேட்டு வளர்வதனால், அதுவே நம் இயல்பிலும் ஒட்டிக்கொள்கிறது.

யாருமற்ற பொழுதுகளை, நம்மில் பலர் விரும்புவதே இல்லை. கடுமையான சிக்கலில் இருக்கும்போது, தாங்கமுடியாத துன்பத்தை உணரும்போது, எதுவும் தேவையில்லாத ஏகாந்தமான மனநிலை வாய்க்கும்போது மட்டுமே சிலர் தனிமையை நாடுவர். அந்த தனிமையினால் ஏதேனும் விபரீதங்கள் நேருமோ என்று பயப்படுபவர்கள், எப்பாடுபட்டாவது அதனைத் தவிர்க்கவே முயல்வார்கள். ஆனாலும், அதனை மீறி, அவர்களை தனிமை ஆட்கொண்டுவிடும். விளைவு, கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். ஒருகட்டத்தில் இது மனநோயாக மாறவும் வாய்ப்புண்டு. இந்த தனிமையைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும் உண்டு.

தனிமை உணர்வானது உள்ளத்தை மட்டுமல்ல, உடலையும் பாதிக்கக்கூடியது. கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடியது. இதனால் தனிமையை விட, அதுபற்றிய பயமே நம்மவர்களுக்கு மிக அதிகம். ஆனால், தற்போதைய தனிக்குடும்ப வாழ்க்கை முறையில், வீட்டைவிட்டு வெகுதொலைவு சென்று பொருளீட்ட வேண்டிய நெருக்கடியில், நம்மில் பலரால் இந்த தனிமையைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

மிகப்பெரும் சாதனைகளைப் படைப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், சாதாரணமான பல விஷயங்கள் நமக்குக் கடுமையான சங்கடத்தை தருவதுண்டு. தீர்வில்லாத எந்தக் கேள்வியும் பெரிதாகுமே தவிர, ஒருபோதும் சிறிதாகாது.

அந்த வகையில், தனிமையை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மிக அவசியம். அதனை உங்களுக்குத் தருகிறது மைண்ட் ஸோன் மருத்துவமனை. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன்
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

செவ்வாய், 5 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon