மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

மணல் கொள்ளை தடுப்பில் வானூர்தி!

மணல் கொள்ளை தடுப்பில் வானூர்தி!

மணல் கொள்ளையைத் தடுக்கத் தனியார் வானூர்திகளை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சட்டவிரோதமான மணல் குவாரியைத் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நேற்று (பிப்ரவரி 6) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கொள்ளையைத் தடுக்கத் தானியங்கி வானூர்திகளை அல்லது செயற்கைக்கோள் படங்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். இதைக் கண்காணிக்கக் குழு அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர்.

மணல் திருட்டில் சில அரசாங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால்தான் இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் கிடைக்காமல் உள்ளதாகத் தெரிவித்தனர் நீதிபதிகள். இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ, சென்னை ஐஐடியின் இயக்குநரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதாக உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது