மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு!

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு!

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

2017 டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக நின்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெற்றி பெற்றார். திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு முன்பு கடந்த ஜனவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமமுக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால் நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று பதிலளித்தார்.

ஆனால், குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்ற ரீதியில் தினகரன் தரப்பிலிருந்து வாதம் எடுத்துவைக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, குக்கர் சின்னத்தை வழங்குவது தொடர்பான தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். எழுத்துபூர்வமான வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் குக்கர் சின்ன வழக்கின் தீர்ப்பு இன்று (பிப்ரவரி 7) வழங்கப்படவுள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு, நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 7 பிப் 2019