மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ஆஸ்கர் விழாவில் புதிய மாற்றம்!

ஆஸ்கர் விழாவில் புதிய மாற்றம்!

கடந்த முப்பது வருடங்களில் முதன்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா, நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறவுள்ளது.

91ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆஸ்கர் குழுவின் மக்கள் தொடர்பாளர் பிப்ரவரி 5ஆம் தேதி, “இந்த ஆண்டு நிகழ்ச்சி தொடர்பாளர் யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் விழாவைத் தான் இந்த முறை தொகுத்து வழங்கவில்லை என அறிவித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்கர் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1989ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon