மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை!

கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை!வெற்றிநடை போடும் தமிழகம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் இன்று (பிப்ரவரி 7) அமலாக்கத் துறையில் ஆஜராகியுள்ளார்.

2007ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

சமீபத்தில் வெளிநாடு செல்வதற்கு, அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ”நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சட்டத்தோடு விளையாடாதீர்கள் என்று எச்சரித்து அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டது.

தொடர்ந்து, ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) காலை 11 மணியளவில் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இன்றோடு அவர் 10ஆவது முறையாக ஆஜராகிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து நாளை ப.சிதம்பரம் நேரில் ஆஜராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon