மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

சின்னதம்பி யானை குறித்து அறிக்கை: நீதிமன்றம்!

சின்னதம்பி யானை குறித்து அறிக்கை: நீதிமன்றம்!

சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க கோவை தடாகம் பகுதியிலுள்ள செங்கற் சூளைகளைமூடக் கோரி, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “கோவை மாவட்ட வனப்பகுதியிலிருந்து யானைகள் ஊருக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வனத்துறையினரைத் திணறடிக்கும் சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைய, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கற் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகைதான் காரணம். யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள் அமைந்துள்ளதால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அதனால், சின்னதம்பி யானையை முகாமில் விட வேண்டும்” என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(பிப்ரவரி 7) விசாரித்தது நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரள வயநாடு தொடங்கி தமிழக எல்லை பகுதியான கோவை மாவட்டம் தடாகம் வழியாக சத்தியமங்கலம், அதன் பின் கர்நாடக என யானைகள் வலசை வருகின்றன. அவ்வாறு வலசை வர 101 யானை வழித்தடங்கள் இதுவரை இருந்தன. அவை பெரும்பாலும் தற்போது ரிசார்ட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் தான் சின்னதம்பி போன்ற யானைகள் வழிதவறி விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சின்னதம்பி யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், 11ஆம் தேதி அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 7 பிப் 2019