மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

பட்ஜெட்: நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

பட்ஜெட்: நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி திமுக தலைமைக் கழகம் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பிப்ரவரி 8 வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் தினத்தன்று மாலை, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள துறை ரீதியான அறிவிப்புகள் குறித்து கேள்வி எழுப்புவது யார் எனவும், கொண்டுவர வேண்டிய கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon