மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

இளம்பெண்களுக்கு பேஸ்புக் திறன் பயிற்சி!

இளம்பெண்களுக்கு பேஸ்புக் திறன் பயிற்சி!

சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், இந்திய இளம்பெண்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி மற்றும் வழிகாட்டல் முயற்சிகளை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கோல் (Going Online As Leaders) என்ற தலைப்பில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக இந்த டிஜிட்டல் திறன் பயிற்சிகளை பேஸ்புக் நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டுக்குள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதன்படி பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப்பைச் சேர்ந்தவர்கள் இருவார கால அடிப்படையில் 25 பெண்களுக்கு டிஜிட்டல் திறன் வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.

இதுகுறித்து பேஸ்புக்கின் மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பொதுக் கொள்கை இயக்குநர் அங்கிதாஸ் கூறுகையில், “பல்வேறு சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சாரப் பின்புலங்களில் இருந்து வரும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மிக வலிமை வாய்ந்த ஆயுதமாக இணையதளமும், சமூக வலைதளங்களும் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இத்தகைய இணையதள மற்றும் சமூக வலைதள வசதிகளைப் பணக்கார பின்னணியுடைய பெண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பழங்குடியின சமூகங்கள் இந்த நாட்டில் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கும் டிஜிட்டல் திறன் பயிற்சிகளைக் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon