மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

நான்கு நிறுவனங்கள் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு!

நான்கு நிறுவனங்கள் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு!

கடந்த வாரம் சென்னையில் ரேவதி, லோட்டஸ் குழுமம், ஸ்கொயர் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் கோவையில் ரேவதி, ஸ்கொயர், லோட்டஸ் குழுமம், பாடி சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 74 இடங்களில் கடந்த 29, 30, 31ஆம் தேதிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள், பணம் உள்ளிட்டவை அப்போது கைப்பற்றப்பட்டன. கடந்த 6 நாட்களாக இவற்றைக் கணக்கிடுதல், மதிப்பிடுதல் மற்றும் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் 433 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது, அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கணக்கில் வராத 25 கோடி ரூபாய் பணம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் ஆகியன சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon