மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

ஓசூரில் விமான நிலையம்: மனுதாரருக்கு அபராதம்!

ஓசூரில் விமான நிலையம்: மனுதாரருக்கு அபராதம்!

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஓசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். “ரோஜா நகரம் என அழைக்கப்படும் ஓசூர் நகரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும், விளைவிக்கப்படும் ரோஜா பூக்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நேரடி விமானச் சேவை அவசியமாகிறது. அதனால், அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று, கடந்தாண்டு ஜூலை 6ஆம் தேதி மத்திய மாநில அரசுகளுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் மனு அளித்தேன். எனது மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது இன்று (பிப்ரவரி 7) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இது அரசு எடுக்க வேண்டிய முடிவு. மனுதாரர் தன்னுடைய கோரிக்கையை நீதிமன்றம் மூலம் நிறைவேற்ற நினைப்பதை ஏற்க முடியாது” என்றனர் நீதிபதிகள்,

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 7 பிப் 2019