மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

குடும்பப் பிரச்சினையில் கைது வேண்டாம்: அறிவுரை!

குடும்பப் பிரச்சினையில் கைது வேண்டாம்: அறிவுரை!

குடும்பப் பிரச்சினைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரதட்சணைக் கொடுமை காரணமாக மனைவியைத் தாக்கியதாகக் கணவர் மீது அளிக்கப்பட்ட புகாரில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட நபர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 7) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. முன்ஜாமீன் மனுக்கள் அதிகரிப்பதைத் தடுக்க, குற்ற விசாரணை முறைச் சட்டம் 41ஏ பிரிவின் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே நீதிமன்றம் இது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகக் காவல் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் குடும்பப் பிரச்சினைகள், சொத்து தகராறுகள் உள்ளிட்ட சிறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தமிழகக் காவல் துறைக்கு அறிவுரை வழங்கினார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon