மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

செல்போன் பறிமுதல்: உயர் நீதிமன்றம் கேள்வி!

செல்போன் பறிமுதல்: உயர் நீதிமன்றம் கேள்வி!

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களிடம் ஏன் செல்போனைப் பறிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை 10,000இல் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யவும், சாலை சந்திப்புகளிலும், மதுபானக் கடைகளிலும் பிளக்ஸ் போர்டு வைக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று (பிப்ரவரி 6) விசாரணை செய்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது,போக்குவரத்து விதிமீறலுக்கான புகார் எண் 9498181457 எப்போதும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து டிஜிபிடம் விளக்கம் கேட்டு பதிலளிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டிச் செல்பவர்களிடம் ஏன் செல்போனைப் பறிமுதல் செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இது குறித்துப் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon