மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

அருவி நாயகியின் அடுத்த படம்!

அருவி நாயகியின் அடுத்த படம்!

அருவி படம் மூலம் கவனம் பெற்ற அதிதி பாலன் அடுத்ததாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குநராக அறிமுகமான படம் அருவி. விமர்சனரீதியாக வரவேற்பு பெற்ற இப்படம் இதில் நடித்த அதிதி பாலனுக்கும் முதல் படம். நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே பிரதான கதாபாத்திரத்தில் நடித்ததுடன் நடிப்புக்காகப் பாராட்டுகளையும் பெற்றார் அதிதி பாலன். எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

அருவி படத்தை தொடர்ந்து அதிதி பாலன் உடனடியாக வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது அவர் சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வெளியான இனம் படத்தை தொடர்ந்து சந்தோஷ் சிவன் தற்போது மலையாளத்தில் ‘ஜேக் அன்ட் ஜில்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். ஜெய்ராம் காளிதாஸ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தற்போது அதிதி பாலன் இணைந்துள்ளார்.

சந்தோஷ் சிவன் இயக்குவதோடு ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சித் டச்ரிவர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். ராம் சுரேந்தர், கோபி சுந்தர் இணைந்து இசையமைக்கின்றனர்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon