மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

அமெரிக்காவில் அனுஷ்கா சர்மாவின் இரட்டையர்!

அமெரிக்காவில் அனுஷ்கா சர்மாவின் இரட்டையர்!

நடிகை அனுஷ்கா சர்மாவும், அவரைப் போலவே தோற்றமளிக்கும் அமெரிக்க பாடகரும் ட்விட்டரில் சந்தித்துள்ளனர்.

உலகில் ஒரே உருவத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என சினிமாக்களில் சில வசனங்களைக் கேட்டிருப்போம். தற்போது, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைப் போலவே அச்சு அசலாக அமெரிக்காவில் ஒரு பாடகி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அனுஷ்கா சர்மா திருமணம் செய்துகொண்ட பிறகு உலகளவில் பிரபலமானார். இருவரும் அண்மையில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டனர். அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தையும், அமெரிக்க பாடகியான ஜூலியா மைக்கேல்ஸின் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் யாரோ பரப்பிவிட்டனர். உலகில் ஒரே உருவத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என்பதற்கு இப்படமே சாட்சி என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் எப்படியோ ஜூலியா மைக்கேல்ஸின் கைகளை எட்டிவிட்டது. இதைக் கண்ட ஜூலியா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டு, “ஹாய் அனுஷ்கா, நாம் இருவரும் நிச்சயமாக இரட்டையர்களாகத்தான் இருப்போம்” என்று தெரிவித்து அதை அனுஷ்கா சர்மாவுக்கும் டேக் செய்திருந்தார். அதற்கு அனுஷ்கா சர்மா, “அட கடவுளே, நான் உங்களைத்தான் என் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன். நம்மை போலவே தோற்றமளிக்கும் மீதமுள்ள ஐந்து பேரையும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon