மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நேற்று (பிப்ரவரி 8) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, தலைவர் பொறுப்பில் கே.எஸ். அழகிரியை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமனம் செய்தார். இரு தினங்களுக்கு முன் கே.எஸ். அழகிரியும், திருநாவுக்கரசரும் டெல்லியில் ராகுலை சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் செயல் தலைவர்களாக வசந்த் குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதிதாகப் பொறுப்பு ஏற்றவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon