மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

வாலிபர் தற்கொலை: வீணான மீட்பு முயற்சி!

வாலிபர் தற்கொலை: வீணான மீட்பு முயற்சி!

ஆரணி அருகே 300 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய வாலிபர் திடீரென்று மேலிருந்து கீழே குதித்தார். இதனால் அவரை மீட்க முயற்சித்த காவல் துறை, தீயணைப்புத் துறையினரின் போராட்டம் வீணாகிப் போனது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (பிப்ரவரி 8) இரவு ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று காலை 6 மணி அளவில் நெல்வாய் பாளையத்தில் உள்ள 300 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார் ரமேஷ்.

அப்பகுதியிலுள்ள மக்கள் இது பற்றி ஆரணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 5 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடந்த நிலையில், திடீரென்று ரமேஷ் மேலேயிருந்து கீழே குதித்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்ந்து 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் வாலிபர் இறந்த சம்பவத்தினால், மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பெரும் வருத்தம் அடைந்தனர்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon