மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கடும் குளிரில் ஷூட்டிங் நடத்தும் மாதவன்

கடும் குளிரில் ஷூட்டிங் நடத்தும் மாதவன்

’ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட்’ படத்திற்காக நடிகர் மாதவன் வெளிநாடுகளில் லொக்கேஷன்களை தேடி வருகிறார்.

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட்’ படத்தில் மாதவன் பிஸியாக உள்ளார். இப்படத்திற்காக மாதவன் தனது கெட் அப்பை மாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக லொக்கேஷனை தேடி படக்குழுவினருடன் மாதவன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜார்ஜியாவில் படக்குழுவினருடன் சேர்ந்து மாதவன் லொக்கேஷன் தேடி வருகிறார். அங்கிருந்து ஒரு வீடியோவையும் அவர் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அதில், “இங்கு -6 டிகிரியில் கடும் குளிராக உள்ளது. அதே சமயத்தில் நாங்கள் நீண்ட நேரம் படப்பிடிப்பு பணிகளை நடத்த வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பது மட்டுமல்லாமல் இப்படத்தை இயக்கியும் வருகிறார் மாதவன். விஜய் மூலன் டாக்கீஸ், சாஃப்ரான் கணேஷா எண்டர்டய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டணியுடன் ட்ரைகலர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த மாதவன், இப்படத்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என நம்பலாம். இஸ்ரோவில் க்ரையோஜெனிக்ஸ் பிரிவை கவனித்து வந்த விஞ்ஞானி நம்பி நாராயணன், விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 2001ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது