மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

வருமான விவரங்களை மறைக்கும் இந்தியர்கள்!

வருமான விவரங்களை மறைக்கும் இந்தியர்கள்!

2017-18 வரி செலுத்தும் ஆண்டில் வெறும் 61 பேர் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் தங்களது வருவாய் விவரங்களை வருமான வரித் துறையிடம் ரிட்டன் தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறாக வெறும் 61 தனிநபர்கள் மட்டுமே 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் தாங்கள் ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2016-17ஆம் ஆண்டில் 38 ஆகவும், 2014-15ஆம் ஆண்டில் 24 ஆகவும் இருந்தது. இந்த விவரங்களை மத்திய நிதித் துறை இணையமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன், பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல, தனிநபர் ஒருவரை ’பில்லியனர்’ என்று வகைப்படுத்தும் அளவுக்கு அதிகாரப்பூர்வ வரையறை எதுவும் இல்லை எனவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சரான ஷிப் பிரதாப் சுக்லா அளித்துள்ள பதிலில், பினாமி சொத்துகள் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறாக ரூ.6,900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2018 டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் 2,000க்கும் மேற்பட்ட பினாமி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon