மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பிரபல பிரிட்டிஷ் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி மறைவு!

பிரபல பிரிட்டிஷ் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி மறைவு!

மார்பில் ஏற்பட்ட தொற்றின் விளைவாக பிரபல பிரிட்டிஷ் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார். அவருக்கு வயது 82.

இதுகுறித்து அவர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆல்பர்ட் ஃபின்னி, வயது 82, குறுகிய கால உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அருகாமையில் அமைதியாக காலமாகிவிட்டார்” என்று தெரிவித்துள்ளனர். மார்பில் தொற்று ஏற்பட்டதால் லண்டனில் உள்ள ராயல் மர்ஸ்டென் மருத்துவமனையில் அவர் மறைந்தார். அவர் மறைந்தபோது அவரது மனைவி பென் டெல்மெஜ், மகன் சைமன் ஆகியோர் அவருக்கு அருகே இருந்தனர்.

ஆல்பர்ட் ஃபின்னி இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் 1936ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தனது 17ஆவது வயதில் புகழ்பெற்ற ராயல் அகாடமி ஆஃப் டிரமாட்டிக் ஆர்ட் கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்றார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் 1960ஆம் ஆண்டில் முதல்முறையாக ‘தி எண்டர்டய்னர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில் ‘சாடர்டே நைட் அண்ட் சண்டே மார்னிங்’ என்ற படத்திலும் நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ‘டாம் ஜோன்ஸ்’ படத்தில் நடித்து பெரியளவில் பிரபலமானார். அதற்காக அவர் முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் ஐந்து முறை ஆஸ்கர் விருதுகளுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon