மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

திடீரென்று தீப்பிடித்த டேங்கர் லாரி!

திடீரென்று தீப்பிடித்த டேங்கர் லாரி!

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்க் சென்ற டேங்கர் லாரி திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாகத் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து, நேற்று (பிப்ரவரி 8) மாலை பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக்கொண்டு மறைமலைநகரில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. அத்திப்பட்டு புதுநகர் அருகே சென்றபோது அந்த லாரியில் கோளாறு ஏற்பட்டது. திடீரென்று என்ஜினில் ஏற்பட்ட கோளாறினால் லாரியின் முன்பக்கத்தில் தீ பரவியது.

இது பற்றி அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரின் நடவடிக்கைகளால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. முன்பக்கத்தில் இருந்து டேங்கர் லாரியின் பின்புறத்துக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீப்பிடித்த டேங்கர் லாரியில் சுமார் 20,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon