மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

பட்டு உற்பத்தியை மேம்படுத்தக் கண்காட்சி!

பட்டு உற்பத்தியை மேம்படுத்தக் கண்காட்சி!

இந்தியாவில் பட்டு உற்பத்தியை மேம்படுத்தவும், பட்டு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவும் இன்று டெல்லியில் மாபெரும் பட்டு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளி அமைச்சகமும் மத்திய பட்டு வாரியமும் இணைந்து வளரும் பட்டு - முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான வழி என்ற தலைப்பில் மாபெரும் பட்டு கண்காட்சியை டெல்லியில் இன்று (பிப்ரவரி 9) ஏற்பாடு செய்துள்ளன. இக்கண்காட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இக்கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்குவோர் இக்கண்காட்சியில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் பட்டு உற்பத்தித் துறை கண்டுள்ள வளர்ச்சி குறித்த விவாதங்களும் சிறப்புரைகளும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பழங்குடியினப் பெண்களுக்கு பட்டு நூற்பு இயந்திரங்கள் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கான தொழில் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. பட்டு நூல் நூற்பை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த நூற்பு இயந்திரங்கள் மத்திய பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. பழைமையான முறையில் பட்டு நூல் நூற்கும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.125 மட்டுமே கிடைப்பதாகவும், இந்தப் புதிய இயந்திரங்களில் நூற்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.350 வரையில் வருமானம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon