மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிதம்பரம் தொகுதியில் போட்டி: திருமாவளவன் சூசகம்!

சிதம்பரம் தொகுதியில் போட்டி:  திருமாவளவன் சூசகம்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதுதான் தன்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லீம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் விசிக சார்பில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 9) சென்னை அசோக் நகரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன். சிதம்பரம் தொகுதியில்தான் 1999ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறேன். அது என்னுடைய சொந்தத் தொகுதி, அங்குதான் எனக்கு வாக்கும் இருக்கிறது. எனவே சிதம்பரத்தில் போட்டியிடுவது என்னுடைய விருப்பம் என்பதன் அடிப்படையில் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளேன். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியின் பட்டியலைத் தருவோம். அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கும். சுமூகமான தீர்வைக் காண்போம்” என்று தெரிவித்தார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon