மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கடந்தாண்டில் 75 யானைகள் உயிரிழப்பு!

கடந்தாண்டில் 75 யானைகள் உயிரிழப்பு!

கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 75 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 8) மக்களவையில் யானைகளின் உயிரிழப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வனத் துறை அமைச்சகம் பதிலளித்தது. அப்போது, கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் வேட்டை மற்றும் விபத்துகளில் 373 யானைகள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. 62 யானைகள் ரயிலில் அடிபட்டும், 226 யானைகள் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்ததாக மத்திய அமைச்சகத்தில் பதிலில் குறிப்பிடப்பட்டது.

“59 யானைகள் தந்தத்திற்காகவும், 26 யானைகள் விஷம் கொடுக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ரயிலில் அடிபட்டு 153 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்தாண்டில் மொத்தம் 75 யானைகள் உயிரிழந்தன. அதில் 48 யானைகள் மின்சாரம் தாக்கியும்,13 யானைகள் ரயிலில் அடிபட்டும் பலியாகின” என்று வனத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

2017ஆம் ஆண்டில் 105 யானைகள் உயிரிழந்தன. இந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது, கடந்தாண்டு யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 2018இல் மட்டும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 227 பேர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். அஸ்ஸாமில் 86 பேரும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 45 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது மத்திய வனத் துறை அமைச்சகம்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon