மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பிரியங்காவுக்கு நான்கு சிலைகள்!

பிரியங்காவுக்கு நான்கு சிலைகள்!

சர்வதேச அளவில் பிரபலமான ஆளுமைகளைக் கௌரவப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலைகளை உருவாக்கி வருகிறது.

சிலை என்ற உணர்வு மறைந்து தத்ரூபமாக மெழுகு சிலைகளை படைப்பதில் மேடம் துஸாட்ஸ் பெயர் பெற்ற அருங்காட்சியமாக உள்ளது. சில நேரங்களில் பிரபலங்கள் தங்கள் சிலையின் அருகே நின்றிருக்கும் போது வித்தியாசம் காண்பது சற்று கடினமானது. காரணம் சிலை வடிவமைப்பாளர்கள் உடைகளில் இருந்து பிரபலங்களின் உடல்மொழி வரை தத்ரூபமாக சிலையில் வடித்திருப்பர்.

பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது நியூயார்க்கில் வைத்துள்ள சிலை எமி விருது வழங்கும் விழாவில் பிரியங்கா கலந்துகொண்டதை அடிப்படையாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜேசன் வூ உருவாக்கிய கவுன் அணிந்து வைர செயின், கம்மலுடன் பிரியங்கா வாய்விட்டுச் சிரிக்கும் காட்சியைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இங்கிலாந்து, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சிலைகள் நிறுவப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon