மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

சபரிமலை நடை திறப்பு: கட்டுப்பாடுகள்!

சபரிமலை நடை திறப்பு: கட்டுப்பாடுகள்!

அடுத்தவாரம் சபரிமலை சன்னிதானம் நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்களுக்குப் புதிதாகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பத்தினம்திட்டா மாவட்டக் காவல் துறை.

வருகிற 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்திவாசுதேவன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைக்கிறார். மறுநாள் அதிகாலை 4 மணிக்குக் கோயில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்களுக்குப் பல்வேறு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். வருகிற 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும்.

இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத் தலைமைக் காவலர் டி.நாராயணன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்குச் செல்ல 10 மணிக்கு மேல்தான் பக்தர்களுக்கும் செய்தி சேகரிப்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“அமைதியான சூழலுக்காகப் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் காவல் துறை கட்டுப்பாடுகளைப் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon