மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 19 பிப் 2020

வாகனச் சோதனையில் வாலிபர் பலி!

வாகனச் சோதனையில் வாலிபர் பலி!

வேலூரில் வாகனச் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து இழுத்ததால், அவர் கீழே விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையைச் சேர்ந்த விக்ரம், விக்னேஷ் ஆகியோர் நேற்றிரவு (பிப்ரவரி 8) கண்ணமங்கலத்தில் இருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கணியம்பாடி தாலுகா காவல் நிலையம் எதிரில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை, பைக்கை நிறுத்தும்படி போலீசார் கைகாட்டினர். போலீசாருக்கு பயந்து இருவரும் பைக்கின் வேகத்தை அதிகரித்துள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்த போலீசார் முயன்றுள்ளனர். வேகமாகச் சென்றதில் எதிர்பாராத விதமாக விக்னேஷ் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரியின் டயருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்ரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பலியான விக்னேஷ் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார்.

இதையடுத்து, போலீசார் விக்னேஷின் சட்டையைப் பிடித்து இழுத்ததால்தான் அவர் லாரியின் டயருக்குள் சிக்கிப் பலியானதாகக் குற்றம் சாட்டினர் அப்பகுதி மக்கள். போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வேலூர் - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பிக்கள் லோகநாதன், ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திச் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon