மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

மெட்ரோ இயக்குநருடன் விஜய் ஆண்டனி

மெட்ரோ இயக்குநருடன் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தற்போது கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன் என மூன்று படங்களில் நடித்துவருகிறார். தற்போது ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

2014ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘ஆள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆனந்த கிருஷ்ணன். அந்தப் படம் பெரியளவில் கவனம் பெறவில்லை. அதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘மெட்ரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அசோக் செல்வனை கதாநாயகனாகக் கொண்டு அவர் இயக்கி வந்த ‘ஆக்ஸிஜன்’ திரைப்படம் நிறைவடையாமல் நின்றுள்ள நிலையில் அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளி, திமிரு புடிச்சவன் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. எனவே இந்த ஆண்டு அவர் ஹிட் படத்தைக் கொடுக்கும் முனைப்பில் இறங்கியுள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon