மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

ஃபேஸ்டைம் கோளாறை கண்டுபிடித்தவருக்கு பரிசுத்தொகை!

ஃபேஸ்டைம் கோளாறை கண்டுபிடித்தவருக்கு பரிசுத்தொகை!

ஃபேஸ்டைமில் ஏற்பட்ட பாதுகாப்பு கோளாறை கண்டுபிடித்த 14 வயது சிறுவனுக்கு பரிசுத்தொகை வழங்கவும், அவரது கல்விக்காக செலவிடவும் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிளின் ஃபேஸ்டைம் செயலியில் மற்றவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கும் கோளாறு ஏற்பட்டது உலகளவில் ஆப்பிள் கருவிகளை பயன்படுத்துவோரிடையே பீதியை கிளப்பியது. இந்நிலையில், ஃபேஸ்டைமில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்து புதிய ஐஓஎஸ் 12.1.4 அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கோளாறை கண்டுபிடித்த 14 வயது சிறுவனான க்ராண்ட் தாம்ஸனுக்கு ஆப்பிள் நிறுவனம் வெகுமதியாக ஒரு தொகையையும் வழங்கவுள்ளது. அத்துடன் அவரது கல்விக்காக செலவிடவும் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனினும், அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களை ஆப்பிள் வெளியிடவில்லை.

அண்மையில் க்ராண்ட் தாம்ஸன் தனது அன்னையுடன் சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஃபேஸ்டைமில் உள்ள கோளாறை ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடிப்பதற்கு முன்பே நான் கண்டுபிடித்தது ஆச்சரியமளிக்கிறது. தொடர்ந்து நான் ஆப்பிள் கருவிகளையே பயன்படுத்துவேன். பொதுவாகவே, நமது பாதுகாப்பை உறுதி செய்யவே ஆப்பிள் விரும்புகிறது. அதை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார். ஃபேஸ்டைம் கோளாறை கண்டுபிடித்ததால் பள்ளியில் அவர் பிரபலமடைந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon