மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

கருவேல மரங்களை அகற்ற உத்தரவு!

கருவேல மரங்களை அகற்ற உத்தரவு!

சிவகங்கை மாவட்ட கிராமமொன்றில் உள்ள கால்வாய், ஊரணிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிச் சீரமைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பொட்டப்பச்சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். “வைகையாற்று நீர் மாரநாடு கண்மாய் வழியாக 10க்கும் மேற்பட்ட ஊரணிகளுக்குச் செல்லும். மாரநாடு கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், தண்ணீர் வராமல் ஊரணிகள் வறண்டு விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கருப்பசாமி தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 9) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது.

அப்போது, கருவேல மரங்களை ஆறு வாரங்களில் அகற்றவும், சேதமடைந்த கால்வாய்களைச் சீரமைக்க நிதி ஒதுக்கவும் உத்தரவிட்டார் நீதிபதி. கால்வாய்களில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon