மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

90 எம்.எல்: விமர்சனங்களுக்கு ஓவியா ரியாக்‌ஷன்!

90 எம்.எல்: விமர்சனங்களுக்கு ஓவியா ரியாக்‌ஷன்!

90 எம்.எல் பட ட்ரெய்லரில் வந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் மீதான விமர்சனங்களுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

நடிகை ஓவியா நடித்த ‘90 எம்.எல்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தை அனிதா உதீப் இயக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா முன்பை விட அதிகம் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியால் அவருக்கு ரசிகர்கள் பெருகியதோடு ‘ஓவியா ஆர்மி’ என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போதுதான் ஓவியாவின் அடுத்த படமான 90 எம்.எல் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்திற்காக ஓவியா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. நேற்று வெளியான 90 எம்.எல் ட்ரெய்லரில் முத்தக்காட்சிகள், ஆபாச வசனங்கள் போன்றவை இருந்ததாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரே சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், 90 எம்.எல் ட்ரெய்லர் குறித்த விமர்சனங்களுக்கு ஓவியாவே பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பழத்தை ருசிப்பதற்கு முன்பாகவே விதையை பற்றி தீர்மானித்துவிடாதிர்கள். சென்சார் செய்யப்பட்ட முழு படத்தை பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அரவிந்த் கிருஷ்ணா கையாண்டுள்ளார். படத்தொகுப்பாளராக ஆண்டனி நியமிக்கப்பட்டுள்ளார். NVIZ Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon