மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

கருணாகரன் மீது காவல் ஆணையரிடம் புகார்!

கருணாகரன் மீது காவல் ஆணையரிடம் புகார்!

நடிகர் கருணாகரன் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக ‘பொதுநலன் கருதி’ படத்தின் இயக்குநர் சீயோன் சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளனர்.

புதுமுக இயக்குநரான சீயோன் இயக்கிய பொதுநலன் கருதி படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏவிஆர் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நேற்று (பிப்ரவரி 9) இந்தப் படம் வெளியானது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சீயோன், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த கருணாகரன் படத்தின் ப்ரொமோஷனுக்காக ஒத்துழைக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். இதையடுத்து இன்று (பிப்ரவரி 9) இயக்குநர் சீயோனும், பொதுநலன் கருதி படத்தின் இணை தயாரிப்பாளரும் நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அவர்களது புகார் மனுவில், “எங்களது பொதுநலன் கருதி திரைப்படத்தில் நடிகர் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் எந்த ப்ரொமோஷனுக்கும் அவர் வரவில்லை. இதனால் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அதை மனவேதனையுடன் பதிவு செய்தார். இந்நிலையில், படத்தின் சிறப்புக் காட்சி முடிந்து இயக்குநர் சீயோன் அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது கருணாகரன் அனுப்பிய ஆட்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர். படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்பதால் இயக்குநர் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுமட்டுமல்லாமல், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தை பிப்ரவரி 7ஆம் தேதி அலைபேசியில் தொடர்புகொண்ட கருணாகரன், தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். கருணாகரன் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon