மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

கர்ப்பமான பெண் காவலர் தற்கொலை முயற்சி!

கர்ப்பமான பெண் காவலர் தற்கொலை முயற்சி!

போலீஸ் உயரதிகாரி தரக்குறைவாக பேசியதால், கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர்.

திருச்சி அருகே சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலகத்தில் கரூரைச் சேர்ந்த தாரணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி அவர் விடுப்பு எடுத்தார். அதன்பின்னர் மேலும் நான்கு நாட்களுக்கு விடுப்பு எடுத்துள்ளார். நேற்று (பிப்ரவரி 8) தாரணி பணிக்குத் திரும்பியுள்ளார். அப்போது, துணை ஆய்வாளர் செல்வராஜ் விடுப்பு நீட்டிப்பு குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது, தான் கர்ப்பமடைந்து இருப்பதாகவும், அதனால்தான் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அதற்கான மருத்துவச் சான்றிதழை காட்டியுள்ளார் தாரணி.

உடனே அவர் கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டல் செய்துள்ளார் செல்வராஜ். இதனால், மன உளைச்சல் அடைந்த தாரணி கொசு மருந்தை எடுத்துக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த மற்றொரு பெண் காவலர், உடனடியாக அவரைத் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் திருச்சி சிறப்பு காவல் படையைச் சேர்ந்த முத்து, சென்னை ஏடிஜிபி அலுவலகத்தைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சி மகளிர் தனிச் சிறைக் காவலர் செந்தமிழ் செல்வி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். தற்போது, தாரணி குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. காவலர்களின் மனச்சுமை மற்றும் மன ஆரோக்கியம் குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon