மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி!

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி!

தமிழகத்தில் உள்ள 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், போலி மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3,000 டாஸ்மாக் கடைகளில் 6,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.5 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, 4 மாதங்களில் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் உள்ள தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்க முடியும்.

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதால் பல குற்றங்களைத் தவிர்க்கலாம் என சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon