மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

மோடியோட மனசு தான் சார் கடவுள்: அப்டேட் குமாரு

மோடியோட மனசு தான் சார் கடவுள்: அப்டேட் குமாரு

‘மச்சான் நாளைக்கு லீவு தான காலையிலேயே நம்ம வீட்டுக்கு வந்துடு. வீட்டுல ஊருக்கு போயிருக்காங்க. நாளைக்கு ஜமாயிச்சுடுவோம்’ன்னு டீ கடையில பக்கத்துல நின்னுகிட்டு இருந்தவரு போன்ல பேசிகிட்டு இருந்தார். சரி வீட்டுக்காரம்மா ஊருக்கு போன சந்தோஷத்துல ப்ரெண்டை கூப்ட்டு நாளைக்கு டி20 மேட்ச் பார்த்துகிட்டு பார்டி பண்ணுவாங்கன்னு நினைச்சுகிட்டேன். காசை கொடுக்கும் போது லேசா சிரிச்சாப்ள. நான் உடனே, ‘என்ன சார் நாளைக்கு பார்ட்டியா’ன்னு பேச்சு கொடுத்தேன். ‘பார்ட்டி இல்ல சார் திருவிழா’. ‘என்ன திருவிழா’ன்னு காதை தீட்டிக்கிட்டு கேட்டேன். ‘நாளைக்கு மோடி வாராருல்ல அதுக்கு தான்’ அப்படின்னார். சரி பாஜககாரரா இருப்பாரோன்னு நினைச்சா கோபேக் மோடி ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் பண்ணுறதுக்கு ரெடி ஆகிட்டு இருக்காங்களாம். பரவாயில்லை காசு பணம் செலவாகாம ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை இவ்வளவு பேரை மகிழ்விக்குற மோடியோட மனசு இருக்குதே அதான் சார் கடவுள்.. அப்டேட்டை பாருங்க

@amuduarattai

மற்ற பேண்ட்டுகளை விட, ஜீன்ஸ் பேண்ட்டுகளை அதிக முறை போட்டாலும், மற்ற பேண்ட்டுகளைப் போல, அடிக்கடி துவைக்கும் வாய்ப்பு ஜீன்ஸ்களுக்கு வாய்ப்பதில்லை.

@ajmalnks

பிரதமர் நரேந்திர மோடி ஊழல்களின் மாஸ்டர்! - மம்தா பானர்ஜி

வாயில வடை சுடுறதுலயும் அவர்தான் மாஸ்டர் மேடம்.

@itz_azha

விஷால் தரப்பால் பலமுறை அவமானப்பட்டேன்

- நடிகர் பார்த்திபன்

தமிழ்ராக்கர்ஸ் கிட்ட அவரு அவமானப்பட்டத விடவா??

@nandhu_twitts

அந்த பையனுக்கு சொந்தமா வீடு இருக்கு கட்டிக்கோ மா..

பொண்ணு: திடிர்னு நிலநடுக்கம் வந்து வீடு இடிஞ்சு போச்சுனா நான் எங்க போறது..!

@Annaiinpillai

கணவன் என்ற செல்போனில் சார்ஜ்ஜை இறங்காமல் பார்த்து கொள்ளும் சார்ஜராக மனைவியும், பேட்டரி பேங்காக அம்மாவும் அவருடனே வாழ்க்கை முழுவதும் பயணிக்கிறார்கள்!

@amuduarattai

தமிழகத்தில தனிநபர் வருமானம் உயர்வு. -ஓ.பன்னீர்செல்வம்.

அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளும் தானே.!?

@sundartsp

பட்ஜெட்டெல்லாம் தாக்கல் செய்வதே யார் கூட்டணியில் யார் இருக்கான்னு கண்டுபிடிக்கத்தான் போல.

@Anandh_Offl

ஊது பத்தி விளம்பரத்துக்கு

தோனி, அமிதாப், கங்குலி எதுக்கு நடிக்குறாங்க.

ஐந்துரூபா ஊதுப்திய இப்ப அம்பது ரூபாய்க்கு விக்குறானுங்க..

@amuduarattai

55 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 55 மாதங்களில் செய்து முடித்துள்ளோம். -மோடி.

ஊழல் பத்தி சொல்றாரோ..!?

@mohanramko

நீங்க வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா?

டிவி சேனல்கள்

@Revathi_kanna

சந்தோசம் என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல...!

தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பதே...!

@ajmalnks

“வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, புதிய இந்தியாவை உருவாக்க முடியும்!”- பிரதமர் மோடி

என்னங்க எந்திரிங்க மோடி புதிய இந்தியான்னு ஏதோ சொல்றாரு...இப்பவே இருக்கிற பணத்தை எடுத்துட்டு பேங்க் வாசலுக்கும் ஏடிஎம் வாசலுக்கும் போயிடுவோம்.-வடகிழக்கு மாநில மக்கள்.

@RahimGazzali

என்னதான் டிக்கெட் எடுத்து பஸ்சில் பயணித்தாலும், வழியில் பஸ்சை நிறுத்தி செக்கர் ஏறும்போது கொஞ்சம் பக்குன்னுதான் இருக்கு.

@Vicky_stirring

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்- தினகரன் #

வல்லவனுக்கு டோக்கனும் ஆயுதம்னு சொல்லுங்க?!

@Annaiinpillai

பெண் வாழ்வில் ஏற்கும் இரட்டை வேடங்கள்

'அதட்டி சொன்னா மனைவி' !

'அன்பா சொன்னா அம்மா' !

@parveenyunus

தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்- வைகோ #

மக்கள்நலகூட்டணி ஞாபகம் வருதே..!

@Thaadikkaran

செய்த தவறுக்கு சூழ்நிலையை காரணம் காட்டாமல் தவறை ஒத்துக்கொள்பவர் மீது ஏனோ மரியாதை தானாக வந்துவிடுகிறது..!!

@sheik_twitts

டிஜிட்டல் டிஜிட்டல்'னு சொல்லியே மொத்தத்தையும் உருவிட்டாங்க இத ஏன் சொல்றேனா தமிழ் சேனல் மட்டும் பாக்றதுக்கு 350 ரூபாயாம்

@yugarajesh2

பட்ஜெட்டை கழுவி, கழுவி ஊத்தினால் அது எதிர்கட்சி; பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளினால் அது கூட்டணி கட்சி; குறைகளையும், நிறைகளையும் பற்றி பேசினால் ஏதாவது ஒரு கூட்டணிக்கு துண்டு போடும் கட்சி.

@mekalapugazh

சினிமா நடிகைகள் மார்ங்கெட் குறைந்ததும் டிவியில் நடிக்கிறார்கள்..

நடிகர்கள் அரசியல் மேடைகளில்.

-லாக் ஆஃப்

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon